Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அட்லி படத்தில் விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் வெளியாகியது!

In சினிமா
Updated: 09:46 GMT, May 13, 2017 | Published: 09:46 GMT, May 13, 2017 |
0 Comments
2105
This post was written by : Anojkiyan

அட்லி இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் விஜய் தற்போது நடித்து வருகிறார்.

இப்படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யா மேனன் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இயக்குனரும், நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். இந்நிலையில் ஹரீஷ் பேரடியும் இப்படத்தில் இணைந்திருக்கிறார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100வது படமாக இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

இதில் விஜய் நடிக்கும் மூன்று கதாபாத்திரங்களில் ஊர் தலைவர், மருத்துவர் என்ற இரு கதாபாத்திரங்கள் குறித்த தகவல் நாம் அறிந்ததே. இந்நிலையில், விஜய்யின் மூன்றாவது கதாபாத்திரம் என்னவென்பது இரகசியமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த கதாபாத்திரம் ஒரு மேஜிக் கலைஞர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஊர் தலைவர் விஜய்க்கு நித்யா மேனன் ஜோடி எனவும், மருத்துவர் விஜய்க்கு காஜல் அகர்வால் ஜோடி எனவும், மூன்றாவது கதாபாத்திரம் மேஜிக் கலைஞர் விஜய்க்கு சமந்தா ஜோடி எனவும் கூறப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg