Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசுக்கு அவப்பெயரை உண்டாக்க திட்டம்: நாராயணசாமி

In இந்தியா
Updated: 10:43 GMT, May 13, 2017 | Published: 10:43 GMT, May 13, 2017 |
0 Comments
1382
This post was written by : Surenth

அரசுக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கில் கொலை, கொள்ளைச் செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) புதுச்சேரியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கொலை, கொள்ளை சமபவங்களில் ஈடுபட்டு வரும் குழுக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அடாவடித்தனமான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களை புதுச்சேரியில் இருந்து வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சட்டவிரோதமாக நிலம், சொத்துக்கள் போன்றவற்றை அபகரிப்பு செய்கின்ற செயற்பாடுகள் முற்றாக தடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மூன்று வருடங்களுக்கு மேலாக பொலிஸ் துறையில் கடமை புரியும் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படும் என்றும் அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் நாராயணசாமி தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg