Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கினிகத்தேனை வாகன விபத்தில் வர்த்தக நிலையம் சேதம்!

In இலங்கை
Updated: 11:30 GMT, May 13, 2017 | Published: 11:30 GMT, May 13, 2017 |
0 Comments
2049
This post was written by : Ravivarman

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரம்பதெனிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வர்த்தக நிலையம் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற மேற்படி விபத்தில் எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும், வாகனச் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டதன் காரணத்தினாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து – மஸ்கெலியா வரை சென்ற மேற்படி வான் கினிகத்தேனை ரம்பதெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதியதுடன், அருகில் இருந்த வர்த்தக நிலையத்திலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.  இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg