Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அர்ப்பணிப்புள்ள தாதியர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும்: ஜனாதிபதி

In இலங்கை
Updated: 16:34 GMT, May 13, 2017 | Published: 16:34 GMT, May 13, 2017 |
0 Comments
1159
This post was written by : Ravivarman

தாதியர் சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருக்கும் அனைவரினது கோரிக்கைகளையும் அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (சனிக்கிழமை) கொழும்பு றோயல் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச தாதியர் தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தாதியர்களின் தரத்தினை மேம்படுத்துவதுடன், அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அரசாங்கம் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

இவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது. இவர்களது அர்ப்பணிப்பு மிகுந்த சேவையானது மிகவும் பெறுமதி மிக்கது. இதனை அனைத்து தாதியர்களும் உணர்ந்து செயற்பட வேண்டும்” என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg