Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எல்லை மீறி வட கொரியா பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை!

In
Updated: 04:18 GMT, May 14, 2017 | Published: 04:18 GMT, May 14, 2017 |
0 Comments
1609
This post was written by : Anojkiyan

உலக நாடுகளை அவ்வப்போது அதிர்ச்சி வலையில் வீழ்த்தி வரும் வடகொரியா, புதிய பேலிஸ்டிக் ரக ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறியுள்ளன.

வட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு வடமேற்கு புற பகுதியான குஸாங் அருகிலிருந்து நேற்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் குறித்த ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணை சுமார் 30 நிமிடங்கள், 700 கிலோ மீற்றர்கள் தூரம் பறந்து ஜப்பான் கடலில் தரையிறங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் புதிய ஜனாதிபதியாக மூன் ஜே இன் பதவியேற்றதன் பின், வட கொரியாவுடன் சுமூகமான உறவை பேண முற்படுவேன் என வாக்குறுதி வழங்கிய நிலையில், வடகொரியாவின் இந்த அத்துமீறலான செயற்பாடு தென்கொரியாவை ஆத்திரமடைய வைத்துள்ளது.

வடகொரியா கடந்த மாதம் மேற்கொண்ட இரு ஏவுகணை சோதனைகளும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg