Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணைய தாக்குதலில் இருந்து விடுபடுவதற்கு உதவும் யூரோபோல் அமைப்பு

In உலகம்
Updated: 07:23 GMT, May 14, 2017 | Published: 05:03 GMT, May 14, 2017 |
0 Comments
1153
This post was written by : Anojkiyan

இணையவெளி தாக்குதல்களை விசாரிக்கும் இ.சி.3 எனப்படும் தனது குழு, பாதிக்கப்பட்ட நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு வருவதாக யூரோபோல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இ.சி.3 குழு, அச்சுறுத்தலை குறைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவதற்கு முயன்று வருவதாகவும் யூரோபோல் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உலகையே அதிர்ச்சியடைய வைத்துள்ள ரான்சம்வெயார் என அழைக்கப்படும் இணைய தாக்குதல் சம்பவம் குறித்து, கடும் அதிருப்தியடைந்துள்ள யூரோபோல் அமைப்பு, இதனை சீர்செய்வதற்கு கடுமையாக போராடி வருகின்றது.

ஒரே நேரத்தில் சுமார் 99 நாடுகளின் 75,000 கணனிகளில் இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சில கணனிகள் சீர்செய்யப்பட்டாலும் பெரும்பாலான கணனிகள் பாதிப்படைந்த வண்ணமே உள்ளதாக கூறப்படுகின்றது.

ரான்சம்வெயார் என அழைக்கப்படும் குறித்த இணையத் தாக்குதல் முறைமை கணனியில் உள்ள மென்பொருட்களை ஊடுருவுவதோடு குறித்த இணையத்தளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர பணம் கேட்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg