Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உக்ரைனில் ரஷ்ய பிரிவினைவாதிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில் நால்வர் உயிரிழப்பு

In ஐரோப்பா
Updated: 06:15 GMT, May 14, 2017 | Published: 05:46 GMT, May 14, 2017 |
0 Comments
1127
This post was written by : Anojkiyan

உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள டோனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்ய பிரிவினைவாதிகள் நடத்திய பீரங்கி தாக்குதலில், நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக அந்த பிராந்தியத்தின் தலைவர் பாவ்லோ ஜீபிவிஸ்கி தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் தொழில்துறை நகரமான அவடிவ்கா நகரில் நேற்று (சனிக்கிழமை) வீடொன்றின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்ததாகவும் மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உக்ரைன் அரசு படை மற்றும் பிரிவினைவாதிகள் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான போதும், இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் விதிமுறைகளை மீறுவதாக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த தாக்குதல் குறித்து பிரிவினைவாதிகள் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. உக்ரைன் அரசு மற்றும் பிரிவினைவாதிகளிடையே கடந்த 2014ஆம் ஆண்டு ஆரம்பமான குறித்த சண்டையில் மொத்தம் 10,000 பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg