Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கர்பலா நகர் காணி தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: நஸீர் அஹமட்

In இலங்கை
Updated: 06:25 GMT, May 14, 2017 | Published: 05:57 GMT, May 14, 2017 |
0 Comments
1411
This post was written by : Ravivarman

மட்டக்களப்பு கர்பலா நகரில் பொதுமக்கள் வாழ்ந்து வந்த 15 ஏக்கர் காணி தனியாரால் சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்டதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பற்கான சட்ட நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

காத்தான்குடி கர்பலா நகரில் மேற்படி காணி விவகாரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுடனான சந்திப்பு நேற்றையதினம் (சனிக்கிழமை) இடம்பெற்றபோதே முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கர்பலா நகர் மக்கள் 15 வருடத்துக்கும் மேலாக வாழ்ந்து வந்த காணிகள் தனியார் சிலரால் முறைகேடான முறையில் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனால் 312 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

காணி தொடர்பான முழு விபரங்களும் எமக்கு கிடைத்துள்ளதுடன்,  இது தொடர்பாக சட்டத்தரணிகளிடம் முழுமையான ஆலோசனைகளைப் பெற்று சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் எமக்கு உள்ளதுடன், தேவையேற்பட்டால் எமது அதிகாரத்தைப் பயன்படுத்தி மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம்” என முதலமைச்சர் நஸீர் அஹமட் மேலும் தெரிவித்தார்.

1

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg