Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கொல்கத்தா அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி

In கிாிக்கட்
Updated: 06:30 GMT, May 14, 2017 | Published: 06:10 GMT, May 14, 2017 |
0 Comments
1604
This post was written by : Surenth

10ஆவது ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றிகொண்டது.

ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற இப் போட்டியில் இறுதி வரை போராடி 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி மும்பை அணியிடம்  தோல்வியை தழுவியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி, முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

மும்பை அணியின் துடுப்பாட்டத்தில், ராயுடு 63 ஓட்டங்களையும் திவாரி 52 ஓட்டங்களையும் ஷர்மா 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். கொல்கத்தா அணியின் பந்துவீச்சில், போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், யாதவ் மற்றும் ராஜ்போட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

174 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

கொல்கத்தா அணி சார்பில், பாண்டே 33 ஓட்டங்களையும் க்ராண்ட்கொமி 29 ஓட்டங்களையும் இயன் 26 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். மும்பை அணியின் பந்துவீச்சில் சௌதி, வினய் குமார் மற்றும் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் ஜோன்சன் மற்றும் ஷர்மா ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg