Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆசிய மல்யுத்த சம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு தங்கப்பதக்கம்

In விளையாட்டு
Updated: 06:57 GMT, May 14, 2017 | Published: 06:57 GMT, May 14, 2017 |
0 Comments
1188
This post was written by : Surenth

ஆசிய மல்யுத்த சம்பியன்ஷிப் தொடரின் ஆண்களுக்கான 65 கிலோ நிறை போட்டியில் தென்கொரியாவை வீழ்த்தி இந்தியா தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளது.

டெல்லியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இந்த போட்டியில் தென்கொரிய வீரரான லீ சியங்சுலை எதிர்கொண்ட இந்திய வீரர் பஜ்ரங் புனியா, 6-2 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கொண்டார்.

முதல் அரை நேரத்தில் 0-2 என்ற நிலையில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா பின்னிலையில் இருந்தார். இரண்டாவது அரை நேரத்தில் சிறப்பாக விளையாடினார்.

இதன்படி, தென்கொரிய வீரரான லீ சியங்சுலை போராட வைத்து, 6-2 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம், ஆசிய மல்யுத்த சம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவிற்கு முதலாவது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg