Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிரணியை பற்றி கவலைப்பட தேவையில்லை என்கிறார் ராகுல் டெவாட்டியா

In கிாிக்கட்
Updated: 07:27 GMT, May 14, 2017 | Published: 07:27 GMT, May 14, 2017 |
0 Comments
1539
This post was written by : Surenth

எதிரணியின் விளையாட்டை பற்றி சிந்திக்காமல் எங்களை நாங்கள் தயார் செய்து கொள்ள வேண்டும் என பஞ்சாப் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ராகுல் டெவாட்டியா தெரிவித்துள்ளார்.

புனே அணிக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) புனேயில் நடைபெறவுள்ளது. இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, ராகுல் டெவாட்டியா மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

இரண்டு அணிகளில் ஒரு அணி பிளே ஒஃப் சுற்றுக்கு செல்வதை உறுதி செய்யும் போட்டியாக இன்றைய போட்டி காணப்படுகின்றதெனவும்  தெரிவித்தார்.

அத்தோடு, இன்றைய போட்டியில் தங்கள் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இந்த போட்டியில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் விளையாடுவதால் சிறப்பான ஒரு போட்டியை இரசிகர்கள் பார்க்க முடியும் என்றும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg