Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பது இருந்தது: மனோஜ் திவாரி

In கிாிக்கட்
Updated: 10:49 GMT, May 14, 2017 | Published: 10:49 GMT, May 14, 2017 |
0 Comments
1182
This post was written by : Surenth

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி வாய்ப்பது தமது அணிக்கு அதிகமாக இருந்ததாகவும் தன்னால் தான் அந்த போட்டியில் தோல்வி அடைய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் புனே அணி வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

புனே மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த டெல்லி அணியுடனான தோல்வி குறித்து கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த போட்டியில், தங்கள் அணி சந்தித்த தோல்விக்கான முழு பொறுப்பையும் தான் ஏற்றுக்கொளவதாகவும், கடைசி நேரம் வரை தான் களத்தில் இருந்தும் வெற்றி பெற முடியாமல் பொய் விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கடைசி சில ஓவர்களுக்கு முன்னர் தான் நான்கு ஓட்டங்களோ ஆறு ஓட்டங்களோ பெற்றுக் கொள்ளவில்லை என்றும் பல தடவைகள் முயற்சி செய்தும் பலன் கிடைக்க வில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

ஒரு சமயத்தில் போட்டியின் வெற்றி தமது அணியின் கையில் இருந்ததாகவும் பின்னர் எவ்வாறு எதிரணியின் கைகளுக்கு சென்றது என்ற கேள்வி இருப்பதாகவும் மனோஜ் திவாரி சுட்டிக்காட்டினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg