Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாம்பழ கேக்

In
Updated: 11:21 GMT, May 14, 2017 | Published: 11:21 GMT, May 14, 2017 |
0 Comments
1322
This post was written by : Anojkiyan

தேவையானப் பொருட்கள்

முட்டை – 2
பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன்
கேக் மாவு – 3/4 கப்
உப்பு – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 1 கப்
உப்பில்லா வெண்ணெய் – 100 கிராம்
வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு – 1/8 டீஸ்பூன்
பால் – அரை கப்

க்ரீம் செய்யத் தேவையானப் பொருட்கள்

டபிள் க்ரீம் – 1 கப்
மாம்பழ துண்டுகள் – 1 கப்
ஐஸிங் சுகர் – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணிலா சாறு – 1 டீஸ்பூன்

மாம்பழத் தயிர் செய்யத் தேவையானப் பொருட்கள்

மாம்பழம் – 500 கிராம் (சிறிதாக நறுக்கியது)
முட்டையின் மஞ்சள் கரு – 4
சர்க்கரை – 1/3 கப்
உப்பு – ஒரு சிட்டிகை
எலுமிச்சைச் சாறு – 3 டேபிள் ஸ்பூன்
ஒலிவ் ஒயில் – 1/4 கப்

கேக் செய்யும் முறை

கேக் செய்யும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அந்தப் பாத்திரம் முழுவதும் வெண்ணெய் தடவி சிறிது மாவை எல்லாப் பக்கங்களிலும் படும்படி தூவி விடவும். வேறு ஒரு பாத்திரத்தில் கேக் மாவு, பேக்கிங் பவுடர், உப்பு, வெண்ணெய் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு மிருதுவாக கலந்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை உடைத்து ஊற்றி நன்கு கலந்துக் கொண்டு, பின் அடுத்த மஞ்சள் கருவை ஊற்றி கலக்க வேண்டும்.

பின்னர் வெண்ணிலாச் சாறு, பால் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு சேர கலந்து, நல்ல மிருதுவான மாவு பதத்தில் செய்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முதலில் செய்த மாவுக் கலவையுடன் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை கேக் செய்யும் பாத்திரத்தில் ஊற்றி தயாராக வைத்துக் கொள்ளவும். 180 டிகிரியில் சூடு செய்து வைத்த மைக்ரோவேவ் ஓவனில், கேக் பாத்திரத்தை வைத்து 20 முதல் 25 நிமிடம் வைத்து பேக்கிங் செய்து கொள்ள வேண்டும். வேக வைத்த கேக்கை நன்கு ஆற விடவும்.

மாம்பழத் தயிர் செய்யும் முறை

மாம்பழத் துண்டுகள், உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். அத்துடன் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து மீண்டும் அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்தக் கலவையை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கெட்டியான பேஸ்டாகும் வரை வைக்க வேண்டும். சரியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஒலிவ் ஒயில் சேர்க்க வேண்டும். இதை நன்கு மூடி இரவு முழுவதும் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும்.

கேக் அலங்கரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் மாம்பழத் துண்டுகளைத் தவிர க்ரீம் செய்யத் தேவையான மற்ற பொருட்கள் அனைத்தையும் சேர்த்து க்ரீமாக கலந்துக் கொள்ளவும். பின் செய்து ஆற வைத்திருக்கும் கேக்கை லேயர்களாக வெட்டிக் கொண்டு ஒரு துண்டை பரிமாறும் தட்டில் வைக்க வேண்டும். அதன் மீது மாம்பழத் தயிரை தடவ வேண்டும். பின்னர் க்ரீமை தடவ வேண்டும். அவற்றின் மீது மாம்பழத் துண்டுகளை வைக்க வேண்டும். இதே போல் ஒவ்வொரு துண்டுகளாக வைத்து மாம்பழத் தயிர் மற்றும் க்ரீம் சேர்த்து கேக் முழுவதையும் செய்து முடிக்க வேண்டும். செய்து முடித்த கேக்கை குளிர்சாதன பெட்டியில் வைத்து சிறிது நேரம் வைத்து பரிமாறுங்கள்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg