Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ்நாடு கபடி அணியை சச்சின் விலைக்கு வாங்கியுள்ளார்

In விளையாட்டு
Updated: 11:27 GMT, May 14, 2017 | Published: 11:27 GMT, May 14, 2017 |
0 Comments
1313
This post was written by : Surenth

புரோ கபடி லீக் 5ஆவது தொடரில் விளையாட உள்ள தமிழ்நாடு கபடி அணியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் தொழிலதிபர் என்.பிரசாத் ஆகியோர் இணைந்து விலைக்கு வாங்கியுள்ளனர்.

எதிர்வரும் ஜூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரை நடைபெறவுள்ள இந்த தொடரில் புதிதாக தமிழ்நாடு, குஜராத், உத்தர பிரதேசம், ஹரியாணா ஆகிய 4 அணிகள் இணைந்துகொண்டுள்ளன.

இந்த நிலையில், ஏனைய மூன்று அணிகளையும் ஜே.எஸ்.டபிள்யூ. குழுமம், அதானி குழுமம்  மற்றும் ஜி.எம்.ஆர். குழுமம் ஆகியவை விலைக்கு வாங்கி உள்ளன.

சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே கால்பந்து லீக் கேரளா அணியின் உரிமையாளராக உள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு கபடி அணியையும் வாங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg