Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆங் சான் சூகியுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு

In இலங்கை
Updated: 12:29 GMT, May 14, 2017 | Published: 12:29 GMT, May 14, 2017 |
0 Comments
1615
This post was written by : Ravivarman

மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச் சீனாவில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சீனாவின் ஒரே பாதை – ஒரே பிராந்தியம் எனும் பாதைத் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக சீனா சென்றுள்ள பிரதமர் அதன் ஒரு கட்டமாக இச்சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். இச்சந்திப்பின்போது மியன்மாரின் ஜனநாயக ஆட்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆங் சான் சூகி பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவின் ஒரே பாதை – ஒரே பிராந்தியம் மாநாட்டிற்கு வருகை தந்துள்ள பல நாட்டினது அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg