Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்தால் மக்கள் பாதிப்பு: தமிழிசை

In இந்தியா
Updated: 08:35 GMT, May 15, 2017 | Published: 04:28 GMT, May 15, 2017 |
0 Comments
1227
This post was written by : Shailu

போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நியாயமானது என தெரிவித்துள்ள பா.ஜ.க. தலைவர் டொக்டர் தமிழிசை சௌந்தரராஜன், இதனால் மக்களே அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசுடனான இறுதி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்த நிலையில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நிலையில், இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழிசை சௌந்தரராஜன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட தோல்வி காரணமாக போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் நேற்றே (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சுமார் 1.5 இலட்சம் போக்குவரத்து தொழிலாளர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். எனவே தொழிலாளர்களின் குறைந்தபட்ச கோரிக்கைகளையாவது அரசு நிறைவேற்ற முன்வர வேண்டும்.

இதேவேளையில் அரச பேருந்தில் தினசரி பயணிக்கும் இலட்சக்கணக்கான பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும்

கம்யூனிஸ்டுகளை பொறுத்தமட்டில் எதிலும் தீர்வு ஏற்பட வேண்டும் என்பதை விட தீவிரமாக போராட்டம் நடைபெற வேண்டும் என்பதிலேயே அவர்களின் நாட்டம் காணப்படும். ஆகவே உள்நோக்கமுள்ள அவர்களது பின்புலத்தை அரசு கவனித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg