Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீன தலைநகர் பீஜிங்கில் இன்று வட்டமேசை மாநாடு ஆரம்பம்

In உலகம்
Published: 05:52 GMT, May 15, 2017 |
0 Comments
1344
This post was written by : Sylviya

‘ஒரே பிராந்தியம் ஒரே பாதை’ திட்டத்தின் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள யன்கீ லேக் சர்வதேச மாநாட்டு மையத்திற்கு (Yanqi Lake International Convention Center) உலக தலைவர்கள் பலர் இன்று (திங்கட்கிழமை) விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று ஆரம்பிக்கப்பட்ட குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று இரண்டாவது நாளாகவும் சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கின் தலைமையில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வட்டமேசை மாநாட்டில் கலந்துகொள்ளும் பொருட்டு 29 அரச தலைவர்கள் உட்பட ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டேரஸ் (Antonio Guterres), உலக வங்கியின் தலைவர் ஜிம் யொங் கிம் (Jim Yong Kim), மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டீன் (Christine Lagarde) ஆகியோரும் விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

உலக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலும் பொதுவான அபிவிருத்தியை ஏற்படுத்தவுமே சீனாவால் பரிந்துரைக்கப்பட்ட குறித்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று ஆரம்பமாகவுள்ள இந்த மாநாட்டில் நாடுகளின் கொள்கைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான உத்திகள் சிறந்த முறையில் ஒருங்கிணைக்கப்படுவதுடன் கூட்டுறவை வலுப்படுத்துவது தொடர்பிலும், தொடர்பாடல் மற்றும் நடைமுறைக்கு தேவையான ஒத்துழைப்பு என்பவற்றை ஏற்படுத்தல் என்பன தொடர்பிலும் அக்கறை செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg