Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீதிபதி கர்ணனின் மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

In இந்தியா
Updated: 10:32 GMT, May 15, 2017 | Published: 06:38 GMT, May 15, 2017 |
0 Comments
1277
This post was written by : Shailu

உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.கர்ணன் தாக்கல் செய்துள்ள மனுவை அவசரமாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அத்தோடு, நீதிபதி கர்ணன் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என கர்ணன் தரப்பு வழக்கறிஞர் அனுமதி கோரியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிபதிகள், தங்களது வாதங்களை ஊடகங்களில் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் எட்டு ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றி சின்னசாமி சுவாமிநாதன் கர்ணனை கடந்த ஆண்டு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனால் ஆத்திரமடைந்த நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்து முறைப்பாட்டு கடிதம் ஒன்றை பிரதமர் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கு அனுப்பி வைத்திருந்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு எதிரான ஊழல் முறைப்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடிக்கு முறைப்பாட்டு மனுவாகவும் அனுப்பி வைத்தார்.

கர்ணனின் இந்த நடவடிக்கையை அவமதிப்பாகக் கருதிய உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததோடு, அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து, தனக்கு இவ்வாறானதொரு உத்தரவை பிறப்பித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்குத்தான் மனநல மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டும் என நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு பிறப்பித்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற உத்தரவை அவமதித்தமை ஆகியவற்றுக்காக  அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg