Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய மகளிர் ஹொக்கி அணியை தோற்கடித்தது நியூசிலாந்து

In விளையாட்டு
Updated: 08:21 GMT, May 15, 2017 | Published: 08:02 GMT, May 15, 2017 |
0 Comments
1254
This post was written by : Surenth

நியூசிலாந்து மற்றும் இந்திய மகளிர் ஹொக்கி அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) புகெகோக்கில் நடைபெற்றது. இந்த போட்டியில் 1 – 4 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்து அணி வெற்றியை பதிவு செய்தது.

இதன்படி, நியூசிலாந்து அணியின் சார்பில், ஜோர்டான் கிரான்ட் 13ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க ஒலிவியா மெர்ரி 23ஆவது நிமிடத்தில் கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தார். 43ஆவது நிமிடம் வரை போராடி, ராச்செல் ஒரு கோலை பெற்றுக்கொடுக்க, டீன்னா ரிட்ஷி 55ஆவது நிமிடத்திலும் கோல் அடித்தார்.

இதேவேளை, இந்திய அணி சார்பில் 31ஆவது நிமிடத்தில் பர்லா கோல் ஒன்றை பெற்றுக் கொடுக்க 1 -4 என்ற கோல் கணக்கில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg