Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொலை

In இந்தியா
Updated: 07:41 GMT, May 15, 2017 | Published: 07:41 GMT, May 15, 2017 |
0 Comments
1280
This post was written by : Shailu

ஜம்மு காஷ்மீரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள பகத்புரா மற்றும் ஹந்த்வாரா பகுதிகளில் இடம்பெற்றுள்ளது.

தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள நிலையில், பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg