Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமர்நாத் யாத்திரைக்கான இராணுவ பாதுகாப்பு அதிகரிப்பு

In இந்தியா
Updated: 10:32 GMT, May 15, 2017 | Published: 09:29 GMT, May 15, 2017 |
0 Comments
1375
This post was written by : Shailu

இவ்வாண்டுக்கான அமர்நாத் யாத்திரைக்கு கூடுதலான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ள யாத்திரைக்காக 14 ஆயிரம் இராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட உள்ளனர். இது கடந்த ஆண்டை விட இரு மடங்கான அதிகரிப்பாகும்.

காஷ்மீரில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகம் உள்ள நிலையில் மேற்படி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கடந்த 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இது போன்ற அசம்பாவிதங்களை தடுக்க மத்திய, மாநில உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் மாநில இமயமலையில் அமர்நாத் குகை கோவில் அமையப்பெற்றுள்ள நிலையில், அங்குள்ள பனி லிங்கத்தை ஆண்டுதோறும் தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg