Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் சம்பியன் பட்டத்தை வென்றார் சிமோனா

In டெனிஸ்
Updated: 10:08 GMT, May 15, 2017 | Published: 09:41 GMT, May 15, 2017 |
0 Comments
1227
This post was written by : Surenth
Madrid Tennis

மெட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியனான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், பிரான்சின் கிறிஸ்டினா மடெனோவிச்சை தோற்கடித்து மீண்டும் சம்பியன் பட்டத்தை  கைப்பற்றியுள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்று வரும் குறித்த தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், சிமோனா ஹாலெப் 7-5, 6-7,6-2 என்ற செட் கணக்கில் கிறிஸ்டினாவை வீழ்த்தி வெற்றிபெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்சிற்கு பின்னர் இந்த தொடரில் தொடர்ந்து ஒற்றையர் சம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை சிமோனா ஹாலெப் பெற்றுக் கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg