Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிம்புவின் படத்தில் கெளரவ தோற்றத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்

In சினிமா
Updated: 10:18 GMT, May 15, 2017 | Published: 10:12 GMT, May 15, 2017 |
0 Comments
1189
This post was written by : Vithushagan
aaaa_3164131f

சிம்பு நடித்துவரும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் கெளரவ தோற்றத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படமே ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. யுவன் இசையமைத்து வரும் இப்படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்து வருகிறார்.

மூன்று விதமான தோற்றங்களில் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் சிம்பு. மூன்று தோற்றங்களில் ‘மதுரை மைக்கேல்’ தோற்றம் மட்டும் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது. ‘அஸ்வின் தாத்தா’ தோற்றத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட தற்போது படக்குழு முடிவு செய்துள்ளது. முதல் பாகம் எதிர்வரும் ஜூன் மாதம் 23ஆம் திகதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். முதல் பாகத்தில் ‘மதுரை மைக்கேல்’ மற்றும் ‘அஸ்வின் தாத்தா’ ஆகிய தோற்றங்கள் மட்டும் இடம்பெறும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் சிம்புவுடன் கெளரவ தோற்றத்தில் நடித்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். இதற்கான படப்பிடிப்பு அன்மையில் நடைபெற்றுள்ளது. ஜி.வி.பிரகாஷ் வரும் காட்சிகள் புதுமையாக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg