Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வியாபார ரீதியிலான சிறந்த படம் ‘பாகுபலி’ என்கிறார் கமல்ஹாசன்

In சினிமா
Updated: 11:09 GMT, May 15, 2017 | Published: 11:03 GMT, May 15, 2017 |
0 Comments
1200
This post was written by : Vithushagan

பாகுபலி இதுவரை எடுக்கப்படாத “வியாபார ரீதியிலான” சிறந்த படம் என்று நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

அண்மையில்  வெளியான பாகுபலி 2 திரைப்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. நடிகர்கள், இயக்குநர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் பாகுபலி குறித்து கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்தியாவின் முக்கிய நடிகரான கமல்ஹாசன் பாகுபலி குறித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

பாகுபலி திரைப்படம் இதுவரை திரைப்படத்துறையில் எடுக்கப்படாத சிறந்த வியாபார ரீதியிலான திரைப்படம் என்று கூறியிருக்கிறார். படக்குழுவினர் மிகவும் கஷ்டப்பட்டு படத்தை உருவாக்கியுள்ளதாகவும் சிறந்த கலாசாரமும், நல்ல பல கதைகள் உண்டு என்பதையும் பாகுபலி திரைப்படம் உணர்த்துகின்றது என்றும்கூறியுள்ளார்.

பாகுபலி படம் எடுக்கப்படுவதற்கு முன்னரே கமல்ஹாசன் ‘மருதநாயகம்’ எனும் வரலாற்று காவியத்தை ஆரம்பித்தார். ஆனால் சில பிரச்சினைகளால் மருதநாயகம் பாதியிலேயே நின்றுவிட்டது.

இதேவேளை, பாகுபலி திரைப்படமானது  இந்திய சினிமாவின் பெருமை நடிகர் ரஜினிகாந்   புகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg