Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இணையப் பாவனையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை!

In தொழில்நுட்பம்
Updated: 12:09 GMT, May 15, 2017 | Published: 12:09 GMT, May 15, 2017 |
0 Comments
1175
This post was written by : Shailu

கணனி வைரஸ் குறித்து இணையப் பாவனையாளர்களுக்கு புதிய எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது இணையத்தளங்களை பயன்படுத்தும் ரேன்சம்வெயா (ransomware) என்று அறியப்படுகின்ற கணனி வைரஸ் குறித்து பாவனையாளர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கணனி அவசர தொழிநுட்ப சேவைப்பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.

அந்தவகையில் மின்னஞ்சல் பயன்பாடு தொடர்பில் அதிக அவதானம் செலுத்துமாறு அப்பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தகவல் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) சைபர் தாக்குதல் இடம்பெறக்கூடும் என மைக்ரோசொப்ட் நிறுவனம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg