Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியன்மாரில் தடையற்ற நிவாரணம் வழங்க அனுமதி வேண்டும்: ஐரோப்பிய ஒன்றியம்

In ஐரோப்பா
Updated: 12:18 GMT, May 15, 2017 | Published: 12:12 GMT, May 15, 2017 |
0 Comments
1622
This post was written by : Sylviya

மியன்மாரின் ரக்கீன் மாநிலத்தில் உள்ள மக்களுக்கு தடையற்ற நிவாரண உதவிப் பொருட்கள் வழங்க அனுமதியளிக்கப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் கிறிஸ்டோஸ் (Christos) தெரிவித்துள்ளார்.

நிவாரண உதவிகளுக்குப் பொறுப்பான கிறிஸ்டோஸ்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இது தொடர்பில் உரையாற்றிய போது, “நான் கடந்த மூன்று நாட்கள் மியன்மாரிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தேன். ரக்கீன் மாநிலத்தில் உள்ள ரோஹின்யா முஸ்லிம்களுக்கு நிவாரண உதவி வழங்கும் பொருட்டு அங்கு செல்ல அனுமதியளிக்க வேண்டும் என மியன்மார் அரசிடம் கோரிக்கை விடுத்தேன். ஏனெனில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் குறித்த பகுதி இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. இந்த விடயத்தை நான் பலமுறை ஏனையோரின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்” என தெரிவித்தார்.

அத்துடன், குறித்த பகுதியில் சுமார் 16,000 பேர் வரை இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர் எனவும் அவர்கள் அவதியுற்றுள்ளனர்  எனவும்  கிறிஸ்டோஸ் தெரிவித்தார்.

இதேவேளை ரக்கீன் மாநிலத்தில் உள்ள இராணுவத்தினர் கொலைகள், பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் கிராமங்களை எரியூட்டி நாசகார செயல்களில் ஈடுபட்டு வருவதாக அங்குள்ள மக்களும் அகதிகளும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

எனினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள மியன்மாரின் ஆலோசகர் ஆங் சான் சூகி, இவ்வாறான வன்முறைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg