Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:45 GMT, May 15, 2017 | Published: 16:45 GMT, May 15, 2017 |
0 Comments
1205
This post was written by : Sivaguru Siva

பிரான்சின் புதிய தலைமையமைச்சராக எடுவாட்; பிலிப் இன்று மாலை பதவியேற்றுள்ளார். இதுவரை தலைமையமைச்சராக இருந்த ஹசினோவ் தனது பணிமனையான மத்தினியோனில் வைத்து இன்று மாலை எடுவாட் பிலிப்பிடம் பதவியைக் கையளித்துள்ளார்.

நாளை  தனது புதிய அமைச்சரவையை தலைமையமைச்சர் எடுவாட் பிலிப் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக அரசதலைவர் இமானுவேல் மக்ரோன் எடுவாட்; பிலிப்பை தலைமையமைச்சராக தெரிவுசெய்திருந்தார். அதன்பின்னர் தனது முதலாவது பயணத்தை ஜேர்மனிக்கு மேற்கொண்டு சான்சலர் அங்கலா மேர்க்கலை சந்தித்துள்ளார்

_96056080_039446840-1

உலகளாவிய அளவில்; கடந்தவெள்ளியன்று  இடம்பெற்ற இணைய ஊடுருவல் தாக்குதல் இன்றும் சிறியஅளவில் ஆசியா மற்றும் ஐரோப்பிய பிராந்தியத்தில் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளால் உடுருவலின் வேகம் தவிர்க்கபட்டதாக அறிவிப்பட்டுள்ளது

150 நாடுகளில உள்ள சுமார் இரண்டு லட்சம் கணினிகள் கடந்த வெள்ளியன்றுஇணைய ஊடுருவல் தாக்குதலுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

_96061803_mediaitem96061801

துருக்கியில் அனைத்துலக விமானப்படைத்தளத்தில் பணிபுரியும் ஜேர்மனிய படையிரைப் பார்வையிடுவதற்கு ஜேர்மனிய நாடாளுமன்ற குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நகர்வுக்கு ஜேர்மன் சான்சலர் அங்கலா மேர்க்கல் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்துலக விமானப்படைத்தளத்தில் பணிபுரியும் ஜேர்மனிய படையிரை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

துருக்கியிலுள்ள அனைத்துலக விமானப்படைத்தளத்தில் 250 ஜேர்மனிய படையினர் பணிபுரிகின்றனர்.

up-ass

இந்தியாவின் உத்தரப் பிரதேச சட்டப் பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டதால் கூச்சல் குழப்பம் நிலவியது

உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யாநாத் பதவியேற்ற பின்னர்  நடைபெற்ற முதலாவது அமர்வில்;, ஆளுநர் ராம் நாயக் உரைநிகழத்தியபோது   எதிர்க்கட்சிகளான சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட தொடங்கினர்.

முதல்வர் யோக ஆதித்ய நாத்தின் நிர்வாகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியே எதிர்க்கட்சிகள் இந்த அமளியில் ஈடுபட்டன

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg