Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை தொடர்பில் வாக்குறுதிகள் வழங்க மோடிக்கு என்ன உரிமை உள்ளது: கம்மன்பில

In இலங்கை
Updated: 03:15 GMT, May 16, 2017 | Published: 03:08 GMT, May 16, 2017 |
0 Comments
1863
This post was written by : Surenth

இலங்கை தொடர்பில் வாக்குறுதிகள் வழங்க இந்திய பிரதமர் மோடிக்கு என்ன உரிமை இருக்கின்றதெனவும் அவர் இலங்கையை இந்தியாவின் 30ஆவது மாநிலமாகத் தான் பார்க்கின்றார் என்றும் கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவிலயாலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு இந்திய பிரதமரின் இலங்கை விஜயம் குறித்து கருத்து தெரிவித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் குறிப்பிடுகையில், “மேற்கு மற்றும் தெற்கு மாகாணத்தில் உள்ள அவசர அம்பியூலன்ஸ் சேவையை நாடுபூராகவும் விஸ்தரிப்பதற்கும் பெருந்தொட்ட மக்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை வழங்குவதற்கும் மோடி உறுதியளித்துள்ளார், அவ்வாறு உறுதி மொழிகளை வழங்க மோடிக்கு என்ன உரிமை உள்ளது.

டிக்கோயா வைத்தியசாலை திறப்பு விழாவின் பின்னர் இடம்பெற்ற கூட்டத்தில் மோடி நடுவிலும், ஜனாதிபதி ஒரு பக்கமும் பிரதமர் மறுபக்கமும் அமர்ந்திருந்தனர், அவ்வாறு அவர்கள் அமர்ந்து இருப்பதை பார்க்கும் போது இலங்கை இந்தியாவின் 30ஆவது மாநிலம் மோன்று இருக்கின்றது.

இந்த 30ஆவது மாநிலத்தில் ஜனாதிபதி மைத்திரி ஆளுநராகவும் பிரதமர் ரணில் முதலமைச்சராகவும் இருப்பது போன்று உள்ளது.இதன் போது இந்திய பிரதமர் ஆற்றிய உரையும் அப்படியே உள்ளது.

இந்திய பிரதமரின் விஜயம் அரசியல் நோக்கமற்றது என ஆளும் கட்சியினர் தெரிவித்திருக்கின்ற போதிலும், மோடியின் உரையை பார்க்கின்ற போது, இலங்கை அரசியல் சார்ந்ததாகவே இருந்ததே தவிர சர்வதேச வெசாக் நிகழ்வில் உரையாற்றுவது போல அமையவில்லை” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg