Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம்

In இந்தியா
Updated: 04:03 GMT, May 16, 2017 | Published: 04:03 GMT, May 16, 2017 |
0 Comments
1215
This post was written by : Shailu

தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழமை)  இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டமானது, சென்னை அண்ணா அறிவாலயத்தில்  காலை 10மணியளவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கலந்துகொள்ள மாநில நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், சட்டமன்ற கூட்டத்தொடரில் முடித்துவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் விவாதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், சட்டமன்ற கூட்டத்தை உடனே கூட்ட முதலமைச்சர் மற்றும் சபாநாயகர் ஆகியோரை வலியுறுத்த வேண்டும் என ஆளுனர் வித்யாசாகர் ராவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ள நிலையில், குறித்த விவகாரம் தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg