Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெங்கு அபாயம்: ஜனாதிபதி தலைமையில் அவசரமாகக் கூடுகிறது டெங்கு ஒழிப்பு செயலணி

In இலங்கை
Updated: 05:39 GMT, May 16, 2017 | Published: 05:39 GMT, May 16, 2017 |
0 Comments
1409
This post was written by : Risha
deng

நாட்டில் டெங்கு நோய் வேகமாக பரவி வருகின்ற நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் டெங்கு ஒழிப்பு செயலணி இன்று (செவ்வாய்க்கிழமை) அவசரமாகக் கூடுகிறது.

இதன்போது, ஆபத்தான் நிலைமையை கருத்திற் கொண்டு டெங்கு பரவுவதை உச்ச அளவில் கட்டுப்படுத்துவதற்கான உடனடி தீர்வுகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாண்டில் மாத்திரம் இதுவரை சுமார் 44 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு;ள்ளதுடன், இதுவரை 115 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இவ்வாண்டு டெங்கு நோயின் பாதிப்பு பாரியளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், புத்தளம், இரத்தினபுரி, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களே டெங்கு நோயினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg