Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பெண்கள் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் தரவரிசையில் ஏஞ்சலிக் கெர்பர் முதலிடம்

In டெனிஸ்
Updated: 07:17 GMT, May 16, 2017 | Published: 07:17 GMT, May 16, 2017 |
0 Comments
1386
This post was written by : Surenth

பெண்களுக்கான டென்னிஸ் ஒற்றையர் பிரிவின் உலகத் தரவரிசையில் ஜெர்மன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் 7ஆயிரத்து 35 புள்ளிகளை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.

பெண்கள் டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ள வீராங்கனைகளின் தரப்பட்டியலின்படி செரீனாவை வில்லியம்ஸை பின் தள்ளி ஏஞ்சலிக் கெர்பர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதன்படி, செரீனாவை வில்லியம்ஸ் 6 ஆயிரத்து 110 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்திலும், 6 ஆயிரத்து 10 புள்ளிகளை பெற்ற கரோலினா ப்ளிகோவா மூன்றாவத் இடத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும், சிமோனா ஹலெப் 5 ஆயிரத்து 205 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தையும், 4 ஆயிரத்து 480 புள்ளிகளை பெற்ற டொமினிகா சிபுல்கோவா ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதேவேளை, மெட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் கிறிஸ்டினா மடெனோவிச்சை தோற்கடித்து சிமோனா ஹாலெப் சம்பியன் பட்டத்தை வெற்றி பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg