Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘பாகுபலி – சிவகாமி’ போன்ற வேடத்தில் நடிக்க வேண்டும்: நந்திதா

In சினிமா
Updated: 06:40 GMT, May 16, 2017 | Published: 06:40 GMT, May 16, 2017 |
0 Comments
1347
This post was written by : Shailu

தமிழில் ‘அட்டக்கத்தி’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஆகிய படங்களில் நடித்து இரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை நந்திதா.

இவர் தற்போது ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘வணங்காமுடி’, ‘உள்குத்து’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துள்ள நடிகை நந்திதா தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி கருத்து தெரிவிக்கையில்,

‘தெலுங்கில் நான் நடித்த பேய்படம் ‘ஹிட்’ ஆனது. அது போன்ற வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் நான் அவற்றை தவிர்த்து விட்டேன்.

தற்போது பேய் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ‘பாகுபலி’ ரம்யாகிருஷ்ணன் மாதிரி ஒரு வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. அப்படி ஒரு பாத்திரத்தில் நடித்த பிறகு தான் திரை உலகை விட்டு விலகுவேன்.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தில் சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறேன். நான் குடும்ப பாங்கான வேடங்களில் நடிப்பதைதான் இரசிகர்கள் அதிகம் விரும்புகிறார்கள்.

இனி வித்தியாசமான வேடங்களில் நடிப்பதோடு, பிடித்த கதைகளில் மட்டும்தான் நடிக்க ஆசைப்படுகின்றேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg