Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிதிக் குறைப்புக்கள் காரணமாக பிரதமரிடம் கடுமையாக நடந்துகொண்ட பெண்

In
Updated: 07:12 GMT, May 16, 2017 | Published: 07:12 GMT, May 16, 2017 |
0 Comments
1486
This post was written by : Sylviya

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவுள்ள பொதுத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் தெரேசா மேயிடம் பெண் ஒருவர் கடுமையாக நடந்துகொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) நிகழ்ந்துள்ளது. மத்திய இங்கிலாந்தில் அபிங்டன் (Abingdon) எனும் பகுதியில் பிரசார நடவடிக்கையில் மே ஈடுபட்ட போது, கெத்தீ (Cathy) என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் கற்றல் குறைப்பாடு உள்ளவர்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கள் தொடர்பில் பிரதமர் மேயிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.

“தெரேசா! நீங்கள் கற்றல் குறைப்பாடு உள்ளவர்களுக்கும் மனநல விருத்தி குன்றியவர்களுக்கும் உதவி புரியும் வகையில் திட்டங்களை ஏற்படுத்தியுள்ளீரா? இந்த விடயத்தில் நான் தீவிரமாக உள்ளேன். எங்களுக்கு நீங்கள் உதவி புரிய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

அதற்கு பதிலளித்த பிரதமர் மே, “பிரித்தானியாவில் உள்ள அனைவரும் பயனடையும் வகையில் நாம் பல திட்டங்களை செயற்படுத்தவுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.

இருப்பினும், மேயை உரையாற்ற விடாது தனது கருத்துக்களை தெரிவித்த குறித்த பெண், “பாரிய பொறுப்புக்களில் உள்ளவர்கள் சிறந்த பலனை அடைகின்றார்கள். ஆனால் நாமோ செய்வதறியாது தவிக்கின்றோம். ஒரு மாதத்திற்கு 100 பவுண்கள் கட்டுப்படியாகாது” என தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் கற்றல் குறைபாடு காரணமாக அவதியுற்று வருவதாகவும் ஆனால் சாதாரண மனிதனைப் போல உள்ள அவரின் வெளித் தோற்றம் காரணமாக, எதுவித சலுகைகளும் அவருக்கு கிடைப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg