Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சஃபாரிகொம் நிறுவனத்தின் பங்குகளை வாங்குகின்றது வொடகொம்

In வணிகம்
Updated: 15:33 GMT, Jun 22, 2017 | Published: 07:23 GMT, May 22, 2017 |
0 Comments
1138
This post was written by : Elakkiya

தென் ஆபிரிக்காவின் மிகப்பெரிய மொபைல் போன் இயக்குநர்களான வொடகொம் கென்யாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான சஃபாரிகொம்மில் 2.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 35 சதவீத பங்குகளை வாங்குகின்றது.

ஆபிரிக்காவில் வர்த்தகத்தை நோக்காக கொண்டு ச.பாரிகொம் நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தென் ஆபிரிக்க நிறுவனத்தின் செல்வாக்கும் கென்யாவில் அதிகரிக்கும்என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி சஃபாரிகொம்மின் மிகப்பிரபலமான M-Pesa  பணப்பரிமாற்ற சேவையும் ஆபிக்கா முழுவதும் பயன்படுத்தப்படுவதற்கு மேற்படி ஒப்பந்தம் உதவியாக அமையும் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் M-Pesa  பணப்பரிமாற்ற சேவை கென்யாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவையானது வங்கிக் கணக்கு இல்லாது மொபைல்போன்கள் மூலம் மக்கள் பணப்பரிமாற்றத்தை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு சஃபாரிகொம்மினால் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் இந்த சேவையானது அதிகளவு வாடிக்கையாளர்களை கொண்டிருக்கவில்லை என்பதால் தென் ஆபிரிக்காவில் நிறுத்தப்பட்டது. எனினும், அல்பானியா, ரோமானியா, கொங்கோ, எகிப்து, கானா, இந்தியா, லெசோதோ, மொசாம்பிக் மற்றும் தன்சானியா ஆகிய நாடுகளில் M-Pesa  பணப்பரிமாற்ற சேவை இன்னமும் நடைமுறையிலுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg