Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தொழில் முனைவோருக்கு வாராந்தம் 100 பவுண்கள் வழங்கப்படும்: லிபரல் ஜனநாயகக் கட்சி

In
Updated: 09:03 GMT, May 16, 2017 | Published: 09:02 GMT, May 16, 2017 |
0 Comments
1441
This post was written by : Sylviya

பிரித்தானிய பொதுத் தேர்தலில் போதிய ஆதரவு கிடைக்கும் பட்சத்தில், தொழில் முனைவோருக்கு வாராந்தம் 100 பவுண்களை வழங்கி உதவிபுரியவுள்ளதாக லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது.

தொழில் முனைவோரின் வாழ்க்கைச் செலவுச் சுமையை குறைக்கும் வகையிலேயே குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் புதிதாக ஒரு நிறுவனத்தை ஆரம்பிக்கவுள்ளவர்களுக்கு முதல் ஆறு மாத காலத்திற்கு அதிகபட்சம் 2600 பவுண்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் விஞ்ஞாபனத்தில், சிறு வணிகங்களுக்கு கூடுதல் ஆதரவு அளிக்கவுள்ளதாகவும் லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, குறித்த பொதுத் தேர்தலில் லிபரல் ஜனநாயகக் கட்சி தெரிவு செய்யப்பட்டால் கஞ்சா போதைப் பொருள் சட்டபூர்வமாக்கப்படும் என அக்கட்சி தெரிவித்திருந்தமை நினைவுகூரத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg