Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிராமிய கதைகளில் நடிக்க விரும்புகிறேன்: ஜீவா

In சினிமா
Updated: 09:56 GMT, May 16, 2017 | Published: 09:56 GMT, May 16, 2017 |
0 Comments
1167
This post was written by : Vithushagan

எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகமும், நட்பும் கிடைத்தபிறகு மண் மணம் கமழும் கிராமிய கதைகளில் நடிக்க விரும்புகிறேன் என்று ஜீவா தெரிவித்துள்ளார்.

ஜீவா நடித்த `சங்கிலி புங்கிலி கதவதொற’ படம் விரைவில் திரைக்கு வருகிறது, அடுத்து நடிக்க விரும்பும் கதை பற்றி ஜீவா அளித்த பேட்டி  ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், `தமிழ் சினிமா மாறியிருக்கிறது. ஒரு முழு படத்தையும் ஒரு சந்திற்குள் எடுத்துவிட்டு படத்திற்கு ` ஒரு சந்து’ என்று பெயரிட்டு வெற்றி பெறும் வகையிலான திறமையான இளம் படைப்பாளிகள் இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவிற்கு  கதாசிரியர்கள் தேவைப்படுகிறார்கள், அவர்கள் தான் முதுகெலும்பு. ஒரு படத்திற்கு தேவையான கதையை எழுதுவது அவர்கள் தான். நாங்கள் நடிகர்கள் கதையை கேட்கிறோம், பிடித்தால் ஒப்பந்தம் செய்கின்றோம் அவ்வளவு தான் எங்களின் பணி.

ரசிகர்களின் ரசனை அறிந்து கதையை எழுதக்கூடியவர்கள் அவர்கள். கதாசிரியருக்கும், இயக்குநருக்குமான ஊதிய இடைவெளியை குறைக்க வேண்டும். பொன்னியின் செல்வன், மருதநாயகம் போன்ற கதைகள் நம்மிடம் நிறைய உள்ளன. லாப நஷ்டம் எதுவாக இருந்தாலும் சினிமாவை நேசிப்பவர்கள் அதைவிட்டு போகமாட்டார்கள். எழுத்தாளர் ஜெயமோகனின் அறிமுகமும், நட்பும் கிடைத்தபிறகு மண் மணம் கமழும் கிராமிய கதைகளங்களில் நடிக்க விரும்புகிறேன்.

`சிவா மனசுல சக்தி’ என்ற படத்தின் மூலம் நடிகர் ஆர்யாவை சிறப்பு பாத்திரத்தில் நடிக்கவைத்து இதனை தொடங்கி வைத்தது நான் தான். அதன் பின் நானும் ஆர்யாவும் ஏராளமான படங்களில்  நடித்துவிட்டோம். இது ஆரோக்கியமான விசயமாக இருந்தாலும், தற்போது இதுவும் போரடித்து விட்டது`. என்றார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg