Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டார் துருக்கி ஜனாதிபதி

In உலகம்
Published: 10:42 GMT, May 16, 2017 |
0 Comments
1515
This post was written by : Sylviya
12

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் அமெரிக்கத் தலைநகர் வொஷிங்டன் டி.சியிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சிரியாவில் உள்ள குர்தீஷ் போராளிகளுக்கு ஆயுதம் வழங்கி உதவிசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது என அமெரிக்கா தெரிவித்ததை தொடர்ந்து அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டே எர்டோகன் நேற்று (திங்கட்கிழமை) அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் குறித்த தீர்மானம் எர்டோகனை கோபமடையச் செய்துள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பில் டொனால்ட் ட்ரம்பின் எண்ணத்தை மாற்றியமைப்பது அல்லது வேறு தீர்மானத்திற்கு வருவது எனும் திட்டத்துடனேயே எர்டோகனின் விஜயம் அமைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய நாடுகளால் குர்தீஷ் போராளிகள் தீவிரவாதிகளாக வகைப்படுத்தாத போதும் துருக்கி அவர்களை தீவிரவாதிகளாக நோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இருந்து ரக்கா நகரை கைப்பற்றும் நோக்கில் குர்தீஷ் போராளிகள் சிரியாவில்  முன்னேறி வருவதாகவும் அதனால் அவர்களுக்கு உதவி புரியும் வகையில் ஆயுதம் வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg