Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குல்பூஷன் ஜாதவ் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞருக்கு ஒரு ரூபா சம்பளம்

In இந்தியா
Updated: 11:05 GMT, May 16, 2017 | Published: 10:42 GMT, May 16, 2017 |
0 Comments
1238
This post was written by : Shailu

பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றால் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன் ஜாதவின் சார்பில் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ள வழக்கறிஞருக்கு, ஒரு ரூபா சம்பளம் வழங்கப்படுவதாக மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

சஞ்சிவ் கோயல் என்ற நபர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் ஏன் குறைந்த கட்டணத்தில் சிறந்த வழக்கறிஞர்கள் கிடைப்பதில்லை என கேள்வி எழுப்பியிருந்ததற்கு சுஷ்மா மேற்குறித்தவாறு பதிலளித்துள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் குல்பூஷன் ஜாதவ் கைது செய்யப்பட்டார். தன் மீதான குற்றச்சாட்டை ஜாதவ் மறுத்த நிலையில், பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த இந்தியா, குறித்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றது. இந்த வழக்கில் ஜாதவிற்கு ஆதரவாக இந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே ஆஜராகியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg