Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கிராமிய பொருளாதார அமைச்சின் உதவியுடன் ஏறாவூரில் மினி ஆடைத் தொழிற்சாலை

In இலங்கை
Updated: 12:09 GMT, May 16, 2017 | Published: 12:09 GMT, May 16, 2017 |
0 Comments
1181
This post was written by : Ravivarman

கிராமிய பொருளாதார அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுடன் ஏறாவூரில் அமைக்கப்பட்டுள்ள மினி ஆடைத் தொழிற்சாலைத் திறப்பு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை (19.05.2017) இடம்பெறும் என ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கப் பொது முகாமையாளர் எம்.எல். அப்துல் லத்தீப் தெரிவித்தார்.

கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலியின் பங்குபற்றலுடன் இடம்பெறவுள்ள இந்த மினி ஆடைத் தொழிற்சாலையை உருவாக்குவதற்குத் தேவையான உபகரணத் தொகுதிகளுக்காக, கிராமிய பொருளாதார அமைச்சு 17 இலட்ச ரூபாவை வழங்கியுள்ள நிலையில், ஏறாவூர் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் 10 இலட்சம் ரூபாவையும் வழங்கியுள்ளது.

இதேவேளை, ஆடைத் தொழிற்சாலையில் 20 பேருக்கு நிபுணத்துவ தொழில் வாண்மைப் பயிற்சிகளை வழங்குவதற்காக பிளான் இன்ரநேஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவையும் வழங்கியுள்ளது.

பயிற்சியை முடித்துக் கொள்ளும் 20 பேரும் இந்த மினி ஆடைத் தொழிற்சாலையில் நிரந்தர ஊழியர்களாக வேலைவாய்ப்புப் பெறவுள்ளார்கள் என்று கூறிய பொது முகாமையாளர் அப்துல் லத்தீப், குறித்த மினி ஆடைத் தொழிற்சாலையில் அனைத்து விதமான ஆடைகளும் உற்பத்தி செய்யப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg