Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதிக்கப்பட்ட முசலி மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு

In இலங்கை
Updated: 12:01 GMT, May 16, 2017 | Published: 12:01 GMT, May 16, 2017 |
0 Comments
1103
This post was written by : Risha

முசலி பிரதேச மக்களின் பூர்வீக காணிகள் தொடர்பான பிரச்சினையை இழுத்தடிக்காது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் பி.பி.அபேகோன் தெரிவித்துள்ளார்.

மாவில்லு வன பாதுகாப்பு பிரகடனத்தினால் குறித்த பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற உயர்மட்ட மாநாட்டின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேற்படி கூட்டத்தின்போது, முசலி பிரதேசத்தில் பூர்வீக காணிகள் தொடர்பாக மக்கள் கருத்துக்களை அறிந்து அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கான மூவர் அடங்கிய சுயாதீன குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாட்டில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியுதீன், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைர் அசாத் சாலி முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன், கலாநிதி ஏ.எஸ் நவ்பர் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg