Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்க ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு செல்லவில்லை: சிறீதரன்

In இலங்கை
Updated: 12:21 GMT, May 16, 2017 | Published: 12:21 GMT, May 16, 2017 |
0 Comments
1484
This post was written by : Vithushagan

இலங்கை அரசாங்கத்திற்கு ஜீ.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்படவேண்டும் என்பதற்காகவே நான் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு சென்றதாக கூறப்படும் விமர்சனங்கள் பொய்யானவை, அரசாங்கத்திற்கு ஆதரவாகவே நான் அங்கு சென்றேன் என்பதை எவரேனும் நிரூபிப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவும் தயார் என  நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற சமகால அரசியல் நிலைமைகள் குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தொிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தொிவித்த அவர், ”இலங்கை நாடாளுமன்றில் உள்ள கணக்காய்வு குழு மற்றும் முறைப்பாட்டு குழு ஆகியவற்றில் அங்கம் வகிக்கிறேன். இந்நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றில் உள்ள குழுக்கள் எப்படி இயங்கிக் கொண்டிருக்கின்றன? நடைமுறைகள் என்ன? என்பனபோன்ற விடயங்களை அறிந்து கொள்வதற்கான செயலமர்வுக்காகவே நான் பெல்ஜியம் சென்றிருந்தேன்.   இதன்போது வெளியே புகைப்படம் எடுத்து கொண்டபோது அதிலே நிர்பந்தத்தின் பெயரிலேயே புகைப்படம் எடுத்துக்கொண்டேன்.

ஆனால் இங்கே சமூக வலைத்தளங்கள், இணைய தளங்களில் மிக மோசமான விமர் சனங்கள் முன்வைக்கப்பட்டு கொண்டிருக்கின்றன.  இவை எங்கள் மீது கொண்டிருக்கும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மட்டுமேயாகும்.

நான் இலங்கை அர சாங்கத்திற்கு ஜி.எஸ்.பி வரிச்சலுகையை பெற்று கொடுப்பதற்காகவே நான் பெல்ஜியம் சென்றேன் எனவும், நான் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு மாறாக செயற்பட் டேன் எனவும் எவராவது நிரூபித்தால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

நான் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி நடப்பவன் அல்ல. அவ்வா றான சமூகத்தில் நான் பிறக்கவும் இல்லை` என கூறினார்

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg