Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பொதுபல சேனா உள்ளிட்ட பௌத்த அமைப்புக்களுக்கு எதிராக முறைப்பாடு!

In இலங்கை
Updated: 13:10 GMT, May 16, 2017 | Published: 13:10 GMT, May 16, 2017 |
0 Comments
1189
This post was written by : Ravivarman

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு பௌத்த அமைப்புக்களுக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த முறைப்பாட்டை இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கொழும்பில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் பொலன்னறுவை பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஞானசார தேரர் உள்ளிட்ட கடும்போக்கு பௌத்த அமைப்புக்கள் மீண்டும் நாட்டில் இனவாத்தைத் தூண்டும் வகையில் செயற்படுவதாகவும், உடனடியாக பொலிஸ் மா அதிபர் இந்த விடையத்தை கவனத்தில் எடுப்பதுடன் உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மேலும், கொஹிலவத்தையில் அமைந்துள்ள முஸ்லிம் பள்ளிவாசல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துக்கும், பொலன்னறுவை பிரதேசத்தில் ஞானசார தேரர் ஆற்றிய உரைக்கும் தொடர்புகள் இருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் முஜிபுர் ரஹ்மான் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg