Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தோப்பூர் நீணாக்கேணி முஸ்லிம் மக்களின் காணிகளுக்குள் அத்துமீறி நுழைந்த தேரர்கள்!

In இலங்கை
Published: 16:19 GMT, May 16, 2017 |
0 Comments
1476
This post was written by : Ravivarman
Thopur

திருகோணமலை சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் நீணாக்கேணி பிரதேசத்தில்  முஸ்லிம் மக்கள் பூர்வீகமாகப் பயிர்ச்செய்கை மேற்கொண்டு வந்த காணியைக் கைப்பற்றுவதற்கு முயன்றமையால் அங்கு பதற்றமான நிலைமை காணப்பட்டது.

பௌத்த மதகுருவும் பௌத்த இளைஞர் குழுவும் இயந்திரங்களின் உதவியோடு நேற்று (திங்கட்கிழமை) அக்காணிக்குள் அத்துமீறி நுழைந்ததுடன் காணியின் பாதுகாப்புக்காக போடப்பட்டிருந்த வேலிகள் இயந்திரங்களால் உடைத்தெறியப்பட்டுள்ளன.

இதனால், இவ்விரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த விடயம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடி தீர்வை பெற்றுக்கொள்ளுமாறு சமரசம் செய்து வைத்துள்ளனர்.

தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த காணியின் உரிமையாளர்கள் 1959ஆம் ஆண்டு எழுதப்பட்ட உரிமை ஆவணத்தை கொண்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg