Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காணாமல் போனோர் அலுவலகம் உடனடியாகச் செயற்பட வேண்டும்: சுமந்திரன்

In இலங்கை
Updated: 17:15 GMT, May 16, 2017 | Published: 17:15 GMT, May 16, 2017 |
0 Comments
1623
This post was written by : Ravivarman

காணாமல் போனோர் அலுவலகம் உடனடியாகச் செயற்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தையும் தீர்வினையும் பெற்றுக் கொடுக்க வேண்டும் என கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற காணாமல் போனோர் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு கிழக்கில் மக்கள் தமது உறவுகள் உயிருடன் இருக்கின்றனர் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து வருகின்றனர். மேலும் தமது உறவுகள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படலாம் என்ற மனவுளைச்சலுடனும் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

காணாமல் போனோர் தொடர்பான விடயத்தில் பல சிக்கல்கள் இருக்கின்றன. வெளிநாட்டு முகவர்களின் உதவிகள், நேர்காணல்கள் என்பன காணப்படுகின்ற போதும் இவை முழுமையானவை அல்ல.

இதுவரையில் 30,000இற்கும் அதிகமான மக்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைப் பற்றிய தகவல்கள் எதுவுமற்ற நிலையே தற்போது காணப்படுகின்றது. எனவே எந்தவித தாமதமுமின்றி காணாமல் போனோர் அலுவலகம் செயற்பட வேண்டும்” என எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg