Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து ரோஜர் பெடரர் விலகல்

In டெனிஸ்
Updated: 05:10 GMT, May 17, 2017 | Published: 05:10 GMT, May 17, 2017 |
0 Comments
1427
This post was written by : Anojkiyan

18 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், உலகத் தர வரிசையில் 5வது இடத்தில் இருப்பவருமான சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் பெடரர், பரிஸில் நடைபெறவுள்ள பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கடந்த ஆண்டு காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடாத 35 வயதான ரோஜர் பெடரர், தொடர்ந்து 2வது ஆண்டாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

போட்டியிலிருந்து விலகியமை குறித்து பெடரர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “நான் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஏ.டி.பி. போட்டிகளில் அதிக நாட்கள் விளையாட வேண்டும் என்பதை கருத்திற்கொண்டே விலகுவதற்கான முடிவை எடுத்துள்ளேன்.

இந்த தொடரில் களிமண் தரையில் நடைபெறும் போட்டிளை தவிர்த்து, புல்தரை மற்றும் கடினமான தரைகளில் நடைபெறும் போட்டிகளுக்கு தயாராகி வருகிறேன். இந்த ஆண்டின் தொடக்கம் எனக்கு அருமையாக இருந்தது. நீண்ட காலம் விளையாடுவதற்கு போட்டி அட்டவணையில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமானதாகும். இதனால் தான் இந்த முடிவுக்கு வந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், எதிர்வரும் 28ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg