Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவுடன் தொடர்பாடல் வழிகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை! – தென்கொரியா

In உலகம்
Published: 05:01 GMT, May 17, 2017 |
0 Comments
1167
This post was written by : Risha

வடகொரியாவுடன் தொடர்பாடல் வழிகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்ற அடிப்படை நிலைப்பாட்டுடன் ஜனாதிபதி மூன் ஜே இன் செயற்படுவதாக தென்கொரியாவின் ஒருங்கிணைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில், வடகொரியா மீது தென்கொரியா, பொருளாதார தடைகளை விதித்துள்ள அதேவேளை பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுக்கும் வகையில், புதிய ஜனாதிபதி மூன் ஜே இன் இருவழிக் கொள்கையினை கையாண்டு வருகின்றார். அதன் ஒரு அங்கமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வகையில் தென்கொரியா பல்வேறு வழிமுறைகளை பரிசீலித்து வருகின்ற போதிலும், இதுவரை எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை.

கொரிய பிராந்தியங்களுக்கு இடையிலான தொடர்பாடல் வழிகள் வடகொரியாவினால் கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கு பின்னர் துண்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg