Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டோனியின் அணித்தலைவர் பறிப்பு விவகாரம்: பிளெமிங் விளக்கம்

In கிாிக்கட்
Updated: 07:27 GMT, May 17, 2017 | Published: 06:17 GMT, May 17, 2017 |
0 Comments
2664
This post was written by : Anojkiyan

ரைசிங் புனே சுப்பர்ஜெயன்ட் அணியின் தலைவர் பதவியில் இருந்து டோனி விலக்கப்பட்டமைக்கு தன்னுடைய பங்கும் இருந்ததாக வெளியான செய்தி, சோடிக்கப்பட்டதொன்று என அணியின் பயிற்சியாளர் ஸ்டிபன் பிளெமிங் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஐ.பி.எல். தொடரில் புதுவரவாக இருந்த புனே அணிக்கு டோனி அணித்தலைவராக செயற்பட்டார். ஆனால் அணியின் மோசமான செயற்பாடு காரணமாக இம்முறை அணித்தலைவர் பதவியிலிருந்து டோனி நீக்கப்பட்டு ஸ்டீவ் ஸ்மித் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், டோனியை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு பயிற்சியாளர் பிளெமிங்கின் பங்கும் இருந்ததாக செய்தி உலா வந்தது. அந்த செய்தியில், “2016 ஐ.பி.எல். தொடரில் 7 போட்டிகளில் மிகவும் நெருக்கமாக வந்து தோற்றோம். டோனியால் போட்டியை வெற்றியுடன் முடிக்க இயலவில்லை, அதனால்தான் அவரை அணித்தலைவர் பதவியில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது” என்று பிளெமிங் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பயிற்சியாளர் பிளெமிங், தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“இது மிகவும் முட்டாள்தனமான ஏற்றுக்கொள்ள முடியாத அர்த்தமற்ற செய்தி. டோனி சிறந்த முறையில் போட்டியை வழிநடத்துபவர். குறிப்பாக மிகவும் நெருக்கடியான நிலையில் போட்டி சென்று கொண்டிருக்கும்போது போட்டியை சிறப்பாக முடிக்கக்கூடியவர். நான் சொன்னதாக வெளியான செய்தி சோடிக்கப்பட்டது” என பதிவிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg