Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கோஹ்லி மற்றும் கேதர் ஜாதவ்க்கு கெய்ல் அறிவுரை

In கிாிக்கட்
Updated: 08:56 GMT, May 17, 2017 | Published: 06:57 GMT, May 17, 2017 |
0 Comments
1534
This post was written by : Anojkiyan

ஐ.பி.எல். தொடரை புறந்தள்ளிவிட்டு விராட் கோஹ்லி, கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் சம்பியன்ஸ் கிண்ண தொடரில் கவனம் செலுத்த வேண்டுமென மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் அறிவுரை வழங்கியுள்ளார்.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த விராட் கோஹ்லி மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தாதன் காரணமாக கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்த நிலைமை இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிண்ண தொடரில் பாதிப்பை ஏற்படுத்தாது என கெய்ல் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

“ரி-ருவென்ரி கிரிக்கெட் பற்றி நினைக்கும்போது மிகவும் நல்ல விடயமாக இருக்கிறது. ஏனென்றால் மிகக் குறைந்த நேரத்தில் விளையாடக்கூடிய ரி-ருவென்ரி கிரிக்கெட்டை 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுகிறார்கள். 50 ஓவர்கள் கிரிக்கெட்டில் கூடுதல் நேரம் துடுப்பாட்டம் செய்ய வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில் கிரிக்கெட்டில் அடித்து விளையாடுவதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்ளலாம். ஐ.பி.எல். தொடரை புறந்தள்ளி வைத்துவிட்டு விராட் கோஹ்லி, கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் தங்களை மீண்டும் நல்ல நிலைமைக்கு கொண்டு வர போதுமான நேரம் உள்ளது.

இந்தியாவின் முதற்தர துடுப்பாட்ட வீரர்கள் நல்ல நிலைமைக்கு திரும்பிவிட்டால், அவர்கள் எவ்வளவு அபாயகரமானவர்கள் என்பது நமக்குத் தெரியும். நாம் எல்லோரும் அதை எதிர்பார்க்கிறோம். தற்போதைய ஐ.பி.எல். தொடரை மறந்து விடவேண்டும். இந்திய அணியின் அனைத்து வீரர்களும் போட்டியை வெற்றிபெற வைப்பதில் சிறந்தவர்களே. இந்திய அணி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் வெற்றி பெற வேண்டும் என்று ஒவ்வொரு வீரர்களும் நினைத்து அதற்கேற்றபடி விளையாடுவார்கள். அதை நிரூபிக்கும் வேட்கையில் உள்ளனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg