Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உருளைக்கிழக்கு பிரட் பிரியாணி

In
Updated: 07:49 GMT, May 17, 2017 | Published: 07:49 GMT, May 17, 2017 |
0 Comments
1274
This post was written by : Elakkiya

தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி – ஒரு கப்,
புதினா – கைப்பிடியளவு,
கிராம்பு – 2,
பட்டை – ஒரு துண்டு,
ஏலக்காய் – 4,
உருளைக்கிழங்கு – 2 ,
கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது – அரை டீஸ்பூன்,
பொரித்த வெங்காயம் – 4 மேசைக்கரண்டி
தயிர் – கால் கப்,
புதினா இலை – கைப்பிடியளவு,
எண்ணெய், நெய், உப்பு – தேவையான அளவு.

அலங்கரிப்பதற்கு:
பொரித்த பிரட்,
பொரித்த வெங்காயம்,
புதினா இலை – தேவையான அளவு

செய்முறை

உருளைக்கிழங்கை பெரிய துண்டுகளாக வெட்டி வைக்கவும். பாஸ்மதி அரிசியை 20 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். உருளைக்கிழங்குடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், இஞ்சி – பூண்டு விழுது, பொரித்த வெங்காயம், புதினா, தயிர், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து சிறிது நேரம் ஊறவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய், நெய்விட்டு சூடானதும் கிராம்பு, பட்டை, ஏலக்காய் போட்டு தாளித்து பின்னர் ஊறவைத்த உருளைக்கிழங்கு கலவையைப் போட்டு 2 நிமிடங்கள் வதக்கவும். அதனுடன் பாஸ்மதி அரிசி, உப்பு சேர்த்து தேவையான தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து இறக்கவும்.

பரிமாறுவதற்று முன்னர் பொரித்த வெங்காயம், பிரட், புதினா சேர்த்து கலந்து பரிமாறவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு – பிரட் பிரியாணி ரெடி!!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg