Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியின் உறுதிமொழிகளை நிறைவேற்ற முடியாமைக்கு சு.க.உறுப்பினர்களே காரணம்!

In இலங்கை
Updated: 09:20 GMT, May 17, 2017 | Published: 08:20 GMT, May 17, 2017 |
0 Comments
1261
This post was written by : Ravivarman

ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த முடியாமல் போனமைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களே காரணம் என கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கிய புரவசி பலய என்ற தன்னார்வ நிறுவனம் குற்றம் சுமத்தியுள்ளது.

இன்றையதினம் (புதன்கிழமை) கொழும்பில் குறித்த அமைப்பு நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அரசியலமைப்பு இவற்றில் ஒன்றாகும் என குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளதுடன் முன்னைய அரசாங்கத்தின் ஊழல்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்படவில்லை என மேலும் தெரிவித்துள்ளது.

அரசியலமைப்பு விடயத்தில் இவர்கள் இன்னும் உறுதிப்பாடு காணப்படவில்லை என்பதுடன், நிறைவேற்று ஜனாதிபதி முறையில் இன்னும் தெளிவில்லாத நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் உள்ளதால் மேற்படி இழுபறி நிலை காணப்படுவதாக புரவசி பலய இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg